இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

COVID-19 தொற்றுக்குள்ளான 34 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் கொரானா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1717 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 13 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர்.
இதனடிப்படையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுக்குள்ளானவர்களில் 870 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *