கொரோனாவால் வெறுத்துப்போயுள்ள வெளிநாட்டு வாழ்க்கை

கொரோனா தாக்கத்தினால் பல சகோதரர்கள் இன்று வெளிநாடுகளில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
தனது பெற்றோர்கள் மற்றும் மனைவி பிள்ளைகளை பிரிந்து குருவி சேர்ப்பது போல் சிறுகச் சிறுக சேர்த்த பணம் கொரோனா தாக்கத்தால் கம்பெனிகள் சம்பளம் கொடுக்காததாலும் பல கம்பெனிகள் சம்பளத்தை குறைத்ததாலும் செலவழிந்து கொண்டே இருக்கிறது. சிலருக்கு சேமிப்பு என்றால் என்ன என்று கேட்பவர்களும் இருப்பார்கள் ஏனெனில் உழைப்பதுக்கு கூடுதலாக அவர்களுக்கு பொறுப்புக்கள் இருக்கும்.
இப் பணத்தினை சேர்ப்பதற்கு எவ்வளவு தியாகங்கள் செய்திருப்பார்கள் என்று எழுத்தினால் விபரிக்க முடியாது ..
வெளிநாடு என்பது எவ்வாறு ஒரு மோகமாக இருந்ததோ அதை விட கொரோனாவுக்கு பிறகு இங்கிருக்கின்ற சகோதரர்கள் வெளிநாடு என்றாலே வெறுப்பாகி இருக்கிறார்கள்.
ஏனெனில் சடுதியாக அனைத்தும் மூடப்பட்டதனால் பலர் பணமில்லாமலும், உணவில்லாமலும் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தவொரு நாட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த நாட்டுக்கு நற் பெயர் ஏற்படுத்தும் விடயங்களைத்தான் பெரிதாக செய்திகளில் பிரசுரிப்பார்கள் ஆனால் உண்மையில் அந்த நாட்டை மேம்படுத்தப் போராடும், பணிபுரியும் தொழிலாளர்களின் செய்திகள் பிரசுரிக்கப்படுவதுமில்லை வெளிவருவதுமில்லை.
அவர்களைப் பொறுத்தவரை எல்லாமே ஒரு செய்திதான்…. பாதிக்கப்படுவது அவர்கள் ஆனால் நிவாரணம் கிடைப்பதோ அந்தந்த நாட்டின் நகரங்களில் இருப்பவர்களுக்கு…..
இவ்வாறான நிலைகளை கருத்திற் கொண்டு வெளிநாடுகளில் இருக்கும் சகோதர்கள் எதிர்பார்த்திருக்கும் சில முடிவுகளாக சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம் ;
விமான நிலையம் திறக்கப்பட்டதும் வெளிநாடுகளை விட்டு வெளியேறி தனது சொந்த நாட்டிலையே நாளாந்த வேலை செய்தாவது உழைத்து குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்வதற்காக செல்வதற்காக காத்திருக்கும் ஒரு குழுவினரும் …
இருக்கின்ற விடுமுறையில் சென்று குடும்பத்தோடு சிறிது காலம் கழித்துவிட்டு வருவதற்காக காத்திருக்கும் ஒரு குழுவினரும் ….
இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருந்துவிட்டு போவது என்றிருப்பவர்கள்…
வேறு வழியில்லாமல் குடும்ப சூழ்நிலை காரணமாக போகவே முடியாதவர்கள்….
என நான்கு வகையான பிரிவுகளாக எமது வெளிநாட்டு சகோதர்கள் இருக்கிறார்கள்