மரண பீதியில் அமெரிக்கா மக்கள் ஒரே நாளில் 865 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நேற்று மட்டும் 865 பேர் பலி.

கொரோனா வைரஸால் உலக உயிரிழப்பு 42 ஆயிரத்து 151 ஆக
உயர்ந்துள்ளது . உலக அளவில் பாதிப்புற்றோர் 8 லட்சத்து 58 ஆயிரத்து 669 பேராக அதிகரித்துள்ளது.ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 100 பேர் குணமடைந்துள்ளனர்.

ஓமானில் முதல் கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.அமெரிக்க்கவில் நேற்று மட்டும் 865 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பும், பலியும் அதிகரித்து வருவதை அடுத்து, பல நாடுகள் ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளன.

உலகளவில், கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை, 8 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில், ஐரோப்பா, அதிகமான மனித உயிர்களை இழந்து, முதலிடத்தில் உள்ளது. இத்தாலியில், கடந்த, 24 மணி நேரத்தில், 837 பேர் இறந்துள்ளனர். இந்நாடு, 12 ஆயிரத்து, 428 பேரை இழந்துள்ளது. கொரோனாவை அடியோடு ஒழிக்கும் நோக்கில், இத்தாலி, மூன்று வார ஊரடங்கு முடியும் நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது.

ஐரோப்பாவைச் சேர்ந்த, ஸ்பெயின் நாட்டில், நேற்று(மார்ச் 31) ஒரே நாளில், 748 பேர் பலியாயினர். இங்கும், 12ம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில், மார்ச், 16 முதல், ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.

அதுபோல, ஐரோப்பாவைச் சேர்ந்த, கிரீஸ், சைப்ரஸ் நாடுகளும், மக்கள் வெளியே வர புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. கிரீஸ், ஊரடங்கு உத்தரவை, வரும், 11ம் தேதி வரை நீடித்துள்ளது . சைப்ரஸ் அரசு, இரவு, 9:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில், ஊரடங்கு உத்தரவு, வரும், 19ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில், மக்கள் வெளியே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் அரசு, ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளது. இங்கு, நேரக் கட்டுப்பாடு அமுலில் உள்ளது. ஒருவர், வெளியே வந்து, பொருட்கள் வாங்க, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

ரஷ்யாவில், கொரோனா பாதித்த, 2,337 பேரில், 17 பேர் பலியாகி உள்ளனர். எனினும், அனைத்து எல்லைகளையும் மூடியுள்ள ரஷ்யா, தலைநகர் மொஸ்கோவில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழி பிதுங்கும் அமெரிக்கா:

வல்லரசு நாடான, அமெரிக்கா, கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி, மீள வழி தெரியாமல் தவிக்கிறது. உலகிலேயே, கொரோனா வைரஸ் பாதிப்பு இங்கு தான் அதிகம். 1.888 ,530 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இறப்பு எண்ணிக்கை, 3 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு, ஏப்ரல் 30 வரை மக்கள் தனித்திருக்க, ‘சமூக விலக்கல்’ உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனிதகுலம் பேராபத்தை சந்திக்கும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

கொரோனா நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளில் அடைபடாவிடில் மனிதகுலம் பேராபத்தைச் சந்திக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா நோய்த் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.சமூக இடைவெளியை பின்பற்றாமல் அங்காடிகள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், அத்தியாவசியப் பொருள்கள் கடைகளின் முன்பு இடைவெளிவிட்டு நிற்காமல் ஒருவருடன் ஒருவர் உரசியபடி நின்று பொருள்களை வாங்குவதும் தொடர் கதையாகி வருகிறது.

பொருளாதாரம், கல்வியறிவில் மிகுந்த வளா்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகள்கூட கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மீள வழி தெரியாமல் திகைத்துக் கொண்டுள்ளன.

மேலும், உயர் பாதுகாப்பு சூழலில் வாழ்ந்த ஸ்பெயின் இளவரசி கூட இந்த நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் , கனடா பிரதமரின் மனைவி ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . அவ்வாறு ஏழை, பணக்காரர் அந்தஸ்து என எந்தவித பாரபட்சமுன்றி கொரோனா நோய்த் தொற்று சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் பரவி வரும் நிலையில் பல நாடுகளில் மக்கள் இன்னும் இந்த நோய் தொற்று குறித்து முழுமையான விழிப்புணர்வு பெறாமல் உள்ளனர் . இந்த நோய்த் தொற்று பரவாமல் தடுக்கப்பட வேண்டும் என்றால் அனைவரும் வீடுகளில் அடைபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் மருத்துவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *