பிறந்தநாளன்று மஹிந்தவின் கோட்டையில் ‘மாஸ்’காட்டினார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24)  ‘மெகா’ அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

பிரதமரின் ஏற்றுமதி பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இதற்குரிய ஆரம்பக்கட்ட பணிகள் ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்டன.

72 ஆயிரம் கோடி ரூபா முதலீட்டின்கீழ்  Sliver park petroleum Private limited  தனியார் நிறுவனத்தின் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் lanwa Sanstha cement Corporation Private limited  தனியார் நிறுவனத்தின் சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அமைச்சர்கள், அதிகாரிகள் பல பலதரப்பினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பிரதமர், அம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி வலயமாக மாற்றியுள்ளோம். எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து மத்தல விமான நிலையத்தையும் கட்டியெழுப்புவோம்.” என்றார்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட மேலும் பல அரசியல் தலைவர்களும் பிரதமருக்கு தொலைபேசி ஊடாக வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களால் சர்வமத வழிபாடு உட்பட மேலும் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *