இலங்கைத் தமிழரால் தயாரிக்கப்படும் பிரமாண்ட திரைப்படம்

AIYAI Wrathful Soul திரைப்படமானது ஏனைய பொலிவுட் திகில் திரைப்படங்களை விட முற்றிலும் மாறுபட்டதாகும்.
வித்தியாசமான முறையில் நகர்ந்து செல்லும் இந்த திரைப்பட கதை பார்ப்பவர்களை திகைக்க வைக்கின்றது என்றால் அது மிகையாகாது.
அந்த அளவுக்கு திரைப்படம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
முற்றிலும் வேறுபட்ட இந்த AIYAI அகோரமாகவும், ஆக்ரோஷமாகவும் காணப்படும் ஒரு அமானுஷ்ய ஆத்மாவை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தமிழரான இளந்திரயன் “அலன்” ஆறுமுகம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளதுடன், கணேஸ் மோகன சுந்தரம் தயாரித்துள்ளார்.
சர்வதேச கலைஞர்களின் ஒத்துழைப்புடன் படமாக்கப்பட்டுள்ள AIYAI திரைப்படமானது ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி கருவாக்கப்பட்டுள்ள கதை களமாகும்.
அதாவது இக்கதையில் வரும் ஆக்ரோஷமான அமானுஷ்ய ஆத்மாவான AIYAI வேறுபட்ட குலத்தை சார்ந்த, குறவர்களை போல மரத்தாலும், தோள்களாலும் செய்யப்பட்ட ஆபரணங்களை அணியும் அதேவேளை அவள் தனது இனத்தவர்களால் உடம்பாலும் மனதாலும் பாதிக்கபடுவதுடன் தமது இனத்தவர்களை பழிவாங்க நினைக்கிறாள்.
அவள் தனது எண்ணத்தை எவ்வாறாயினும் நிறைவேற்றிக் கொள்ள நினைத்து ஒரு வாலிபனை ஆட்கொண்டு அவனை வழிநடத்துகிறாள்.
இதனால் வெகுவாக பாதிக்கப்பட்ட அந்த வாலிபன் தன்னிலை மறந்து தனக்கு என்ன நடக்கின்றது என்பதை உணரவும் முடியாமல் அதனை யாரிடமும் கூறவும் முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறான்.
உண்மையில் கூறுவதாக இருந்தால் ஒரு வாலிபனுக்கும், சாந்தியடையாத ஒரு ஆத்மாவுக்குமிடையிலான போராட்டமே இங்கு படமாக்கப்பட்டுள்ளது.
ஒரு உண்மை சம்பவத்தை கூட இயக்குனர் இந்த திரைப்படத்திற்கு உள்வாங்கியுள்ளார்.
அதாவது மயாணத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்குள்ள கமராவில் யதார்த்தமாக ஒரு ஆத்மாவின் உருவம் பதிவாகியிருந்தது.
அந்த சம்பவத்தையும் கூட மிகவும் துள்ளியமான முறையில் இயக்குனர் இப்படத்தின் மூலம் திரைக்கு கொண்டு வந்துள்ளார்.
AIYAI தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்கின்றாளா? அதற்கு வாலிபன் உதவுகிறானா? என்பதே இக்கதையின் கரு.
AIYAI திரைப்படம் குறித்து சர்வதேச ரீதியில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படும் அதே சமயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு விருந்தாக நாளைய தினம் உலகளாவிய ரீதியில் பல திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.
இந்த திரைப்படத்தை இலங்கையில் “Ceylon theaters” நிறுவனம் வெளியிடுகின்றது. சஞ்சீவ தென்போ அதற்கான அனுசரணையை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *