ஆண்கள் தாடி வளர்த்தால் கொரோனா வைரஸ் வருமா?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

முகத்தில் முகமூடி அணிய ஏதுவாக எம்மாதிரியான தாடி வளர்த்தால் சரியாக இருக்கும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ள படம் ஒன்றை குறிப்பிட்டு இந்த செய்தி பரவி வருகிறது.

ஆனால் இந்த படத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2017ஆம் ஆண்டு பணியிடங்களுக்கு முகமூடி அணிந்து செல்பவர்கள் குறித்தான வலைப்பூ ஒன்றில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.

“அந்த வலைப்பூவில், முகமூடியின் சீல் பகுதியில் தாடியோ, கிர்தாவோ அல்லது மீசை முடியோ இருந்தால் முகமூடியின் செயல்பாட்டை அது குறைத்துவிடும்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பூ வெளியான நேரம் ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தற்போது அணியப்படும் பல முகமூடிகளில் இறுக்கமான சீல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளில் கொரோனாகொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய சீனாவை தாண்டி மற்ற நாடுகளில் முதல்முறையாக இந்த வைரஸ் தாக்குதல் மிக வேகமாக பரவிவருவதாக புதன்கிழமையன்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

கடந்த டிசம்பரில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 40 நாடுகளில் 80,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில் இதில் பெரும்பான்மையான பாதிப்பு சீனாவில் தான்.

கோவிட்-19 என்றழைக்கப்படும் இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை சீனாவில் மட்டும் 2,750க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *