ஜனாதிபதி தலைமையில் நடக்க உள்ள முக்கிய நிகழ்வு

எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள முக்கிய நிகழ்வு!

எதிர்வரும் 28 ஆம் திகதி 110 நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுயில் இடம்பெறவுள்ளது.

அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் 844 இன் 2018 ஆம் நிதியாண்டுக்கான அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் 800 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இதேவேளை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் இந்த கணினிமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்துக்கு அமைய, உயர் செயல்திறன் மட்டத்தை அடைந்த நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *