உலகை வியக்க வைத்த இலங்கையின் இயற்கை நீச்சல் தடாகம்

பஹந்துடாவா” இயற்கை குளியல் தடாகம் இயற்கை நமக்களித்திருக்கும் ஒரு உன்னத கொடை
இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பெலிஹுலோயா என்ற சிறிய கிராமத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த இயற்கை நீர்த்தடாகம் பெலிஹுலோயா நீர்த்தேக்கத்தின் ஒரு கிளை நீரோடை ஆகும்.
ஆகாயத்தில் இருந்து பார்த்தால் இந்த குளமானது விகாரைகள் , மற்றும் இந்துக்கோவில்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் களிமண் விளக்கின் வடிவத்தை ஒத்த ஒரு அமைப்பில் காணப்படுவதால் இதற்கு “பஹந்துடாவா” எனப்பெயர் வந்ததாக இந்த கிராமத்து மக்கள் கூறுகின்றனர்.
நடப்பதற்கு போதுமான வலிமையுடையவராக இருந்தால் பெலிஹுலோயா கிராமத்தில் இருந்து இயற்கையின் ரம்மியமான காட்சிகளை ரசித்துக்கொண்டு கால் நடையாக கூட இந்த குளத்தை அடையலாம்
அவ்வாறில்லாமல் நீங்கள் உங்களுடைய சொந்த வாகனத்தில் செல்வீர்களானால் உங்களது இந்த குளத்தை நோக்கிய பயணம் மேலும் இலகுவாகும்
பெலிஹுலோயா ரெஸ்ட்ஹவுஸுக்கு அடுத்தபடியாக இடதுபுறமாக திரும்பும் வழியில், 5 நிமிட ஓட்டத்தில் ஒரு ஒரு பிரதான பாதை உள்ளது. அங்கிருந்து நேராக சென்றால் 20 நிமிடத்தில் குளத்தை உங்களது சொந்த வாகனத்தின் மூலம் அடையலாம்
அங்கே உங்கள் வாகனத்தை நிறுத்த ஒரு சிறிய தேநீர் கடை உள்ளது பார்க்கிங் செய்வதற்கு அவர்கள் ரூ. 100 அறவிடுகிறார்கள்.
இந்த தேநீர் கடையிலயே ருசியான சாப்பாடும் (Tradition food) கிடைக்கிறது பசித்தால் இங்கே சாப்பிட்டுவிட்டு உங்கள் பயணத்தை தொடரலாம்
இந்த நீர்வீழ்ச்சியின் உயரத்தை அடைவது கொஞ்சம் கடினம்தான்
அண்ணளவாக சுமார் 500M தூரத்தில் ஒரு ஆற்றை கடந்துதான் இதன் உச்சியை அடையமுடியும் சிறிய குழந்தைகள், 60+ வயதுடையவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் இதை தவிர்ப்பது நல்லது
முற்றுமுழுதாக இயற்கை வனங்கள் மற்றும் மலைகளை சூழ்ந்து அதன் நடுவில் எப்போதும் தெளிவான நீலநிறமாகவே காணப்படும் இந்த நீர் ஓடையின் ரம்மியமான காட்சியை ரசிப்பவர்கள் மனதினுள் ஒரு வித அமைதி( Nature Relax) உணர்வை தோற்றுவித்துவிடுகிறது.
தற்போதைய இயந்திர கால ஓட்டத்திற்குள் சிக்கி தவிக்கும் எமக்கு இறைவன் இயற்கையாகவே இலவசமாக அமைத்து தந்துள்ள மன அமைதியை தரும் இவ்வாறான இடங்களுக்கு நம் வாழ் நாளில் கட்டாயம் ஒரு முறையாவது இதனை தேடிச்சென்று அனுபவியுங்கள்
இந்தக்குளம் நீராடுவதற்கு மிகவும் ஆபத்தான இடம் ஆகும். நன்றாக நீச்சல் தெரிந்த மற்றும் அனுபவமுள்ளவர்கள் மாத்திரம் இதற்குள் இறங்கி குளிப்பது சிறந்ததது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *