எரிபொருள் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

92 ஒக்ரைன் பெற்றோல் 2 ரூபாவாலும், 95 ஒக்ரைன் பெற்றோல் 5 ரூபாவாலும் குறைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசலின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு கூறியுள்ளது.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலைக் குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *