‘கல்முனை வடக்கைத் தரமுயர்த்து:’ அத்துரலிய தேரர் குழுவினர் நேரில் பேராதரவு தெரிவிப்பு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி குறித்த உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத் தலைவரும் கல்முனை முருகன் ஆலயப் பிரதம குருவுமான சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை கிறிஸ்தவ போதகர் அருட்தந்தை கிருபைராஜா, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் ஆகியோரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. எனினும், அவர்கள் போராட்டத்தைத் தொடர்கின்றனர்.

இவர்களுக்கு இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமூகத்தினர் நேரில் பேராதரவை வழங்கி வருகின்றனர். அந்தவகையில், தற்போது போராட்டக் களத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தலைமையிலான குழுவினர் வந்துள்ளனர்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக உடன் தரமுயர்த்த வேண்டும் எனவும், நியாயமான உண்ணாவிரதப் போராட்டதுக்குத் தாம் முழு ஆதரவு தெரிவிப்பதாகவும் அத்துரலிய ரத்தன தேரர் தலைமையிலான குழுவினர் அங்கு உரையாற்றும்போது தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *