மலேசிய அரசுடன் இணைந்து நைற்றா வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தல்! – அந்நாட்டுத் தூதுவருடன் நஸீர் பேச்சு

மலேசிய அரசுடன் இணைந்து தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் (நைற்றா) வேலைத்திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில் பேச்சு நடைபெற்றது.

இலங்கைக்கான மலேசியத் தூதுவர் இஸ்மாயில் மொஹமட் விக்ரி, தேசிய பயிலுநர், கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் தலைவர் நஸீர் அஹமட்டுக்கும் இடையில் நைற்றா அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன் இந்தப் பேச்சு நடைபெற்றது.

இதன்போது தற்போது நைற்றா மூலமாக மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

குறிப்பாக நைற்றாவினால் பயிற்சி பெற்று வேலைவாய்ப்புக்கான திறமைக்குரிய சான்றிதழ்களைக் கொண்டுள்ளவர்களுக்கு மலேசியாவில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவது மற்றும் மேலதிக பயிற்சிகளை பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் மலேசியாவிலுள்ள தனியார் பல்கலைககழகங்களில் மேலதிக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.

மிக முக்கியமாக மலேசியா – இலங்கை தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றை இங்கு நிறுவது தொடர்பில் தீர்க்கமான பேச்சுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவற்றின் ஊடாக எதிர்காலத்தில் நாட்டில் நிலவும் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு ஓரளவுக்குத் தீர்வுகாண முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் நைற்றா தலைவர் நஸீர் அஹமட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *