வவுனியாவில் கொடூரம்! இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!!

வவுனியா, சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவர் சாளம்பைக்குளத்தைச் சேர்ந்த இம்திகா அஹலம் என அழைக்கப்படும் 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உடலின் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *