இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவர் அனுமதி

மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரிக்கு 2019ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஏப்ரல் 20 சனிக்கிழமை, 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை எட்டு மணி முதல்மாதம்பை இஸ்லாஹிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சூடானின் சர்வதேச ஆபிரிக்கபல்கலைக்கழகத்தில் (International AfricanUniversity Sudan- IAU) அங்கத்துவம் பெற்றுள்ள இஸ்லாஹிய்யாவின் ஆறு வருட அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கற்கை நெறியைப் பூர்த்தி செய்வதன் மூலம்இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) அங்கீகாரம் பெற்ற பட்டதாரியாகலாம்.

மூன்று வருட வதிவிட கற்கைநெறியைத் தெரிவுசெய்வோர் மூன்று வருடத்தினுள் அரபு மற்றும் இஸ்லாமிய கற்கையில் டிப்ளோமா பாடநெறியுடன் க.பொ.த. உயர் தரத்தில் வர்த்தகத் துறையில் கல்வியைக் கற்று AAT பாடநெறியைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் 0777345367, 07773458366, 0772649152  ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி முஹம்மத் முபீர் (இஸ்லாஹி) தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *