முகம்காட்டியே இனி ஏ.டி.எம்மில் பணம் எடுக்கலாம்!

ஏ.டி.எம்.களில் மோசடி மற்றும் திருட்டுகளை தடுக்க உலகிலேயே முதல்முறையாக முகத்தை பார்த்து பணம் எடுக்கும் Facial Recognition Technology உடன் கூடிய நவீன ஏ.டி.எம். இயந்திரத்தை சீனா உருவாக்கி உள்ளது.

சின்குவா பல்கலைக்கழகம் மற்றும் செக்வான் டெக்னாலஜி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஏ.டி.எம்.-ஐ உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்கனவே சான்றிதழ் வழங்கப்பட்டு விட்ட நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, கைரேகை பதிவு மூலம் பணம் எடுக்கும் ஏ.டி.எம். இயந்திரங்கள் சிலி, கொலம்பியா போன்ற நாடுகளில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கிறது.

ஆனால், அது போன்ற பயோமெட்ரிக் ஏ.டி.எம்.கள் அதிக செலவினம் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிக அளவில் வைக்கப்படவில்லை.

இந்நிலையில், சீனாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு விரைவில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *