’10 பஸ்கள் வேண்டும்’ – அரவிந்தகுமார் எம்.பி. கோரிக்கை!

இலங்கை போக்குவரத்துச் சபையின் பதுளை டிப்போ ஊடாக பெருந்தோட்டப் பகுதியில் சேவையில் ஈடுபடுத்தும் வகையில் குறைந்த பட்சம் பத்து சிறுபஸ்களையாவது பெற்றுத் தருமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரனதுங்கவிற்கு அவசர கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.


அக்கடிதத்தில் பிரதிகள் இலங்கை போக்குவரத்துச் சபை தலைவர் மற்றும் டிப்போ முகாமையாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.தொடர்ந்து அக்கடிதத்தில்

“பதுளை டிப்போவிற்கு 175 பஸ்களின் பற்றாக்குறை இருந்து வருகின்றது. ஆனால், சேவையில் ஈடுபடுத்துவதற்கு 120 பஸ்கள் மட்டுமேயுள்ளன.

சேவைகளுக்கு பஸ் பற்றாக்குறையினால், டிப்போ ஊழியர் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். அத்துடன் மக்கள் பிரதிநிதிகளான எமக்கும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சேவைகளில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில் பெரும் பகுதி தொழில்நுட்ப கோளாறுகளினால் இடைநிறுத்தப்படுகின்றன.

இச்சேவை இடைநிறுத்தங்களினால் பாடசாலைகளுக்கு செல்லும் மாணவஇ மாணவிகள் தொழிலுக்கு செல்வோர் ஏனைய தேவைகளுக்கு செல்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆகவே இது விடயத்தில் தாங்கள் தலையீடு செய்து பதுளை டிப்போவில் ஏற்பட்டிருக்கும் பஸ் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதோடு-  பெருந்தோட்டப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்த பத்து சிறிய பஸ்களையாவது பெற்றுத்தர உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பதுளை நிருபர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *