சச்சினின் சாதனையை முறியடித்த நேபாள வீரர்!

சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச சாதனையை நேபாள நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர் ரோஹித் பாவ்டெல் முறியடித்து உள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் 145 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நேபாள அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் நேபாள நாட்டை சேர்ந்த 16 வருடம் 146 நாட்கள் வயது கொண்ட இளம் கிரிக்கெட் வீரரான ரோஹித் பாவ்டெல் 58 பந்துகளில் 55 ஓட்டங்கள் எடுத்து உள்ளார்.
இதனால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மிக குறைந்த வயதில் அரை சதம் அடித்து சாதனை புரிந்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் தெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் அரை சதம் (59 ரன்கள்) கடந்தபொழுது அவரது வயது 16 வருடம் 213 நாட்கள் ஆகும்.
இதனால் நேபாள கிரிக்கெட் அணியின் வருங்கால நட்சத்திர வீரராக பாவ்டெல் உருவெடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி வெற்ற பெற்றதனை தொடர்ந்து,
நேபாள கிரிக்கெட் அணி முதன்முறையாக ஒரு நாள் போட்டிக்கான அந்தஸ்து பெற்றுள்ளது.
இது இவரது சாதனை பயணத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *