சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு என்ன? சபையில் திலகர் எம்.பி. விளக்கம்

1992 ஆம் ஆண்டுக்கு பிறகு  பெருந்தோட்டத்துறை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் அல்லது பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாது சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.

இனவாத ரீதியில் பெருந்தோட்டத் தொழில்துறையை பெருந்தோட்டங்களாகவும், சிறு தோட்டகளாகவும் ஆட்சியாளர்களால் பிரிக்கப்பட்டது. இதில் சிறுதோட்ட உரிமையாளர்களாக சிங்களவர்களே உள்ளனர்.

கூட்டு ஒப்பந்தம் உட்பட இந்த பொறிமுறைசார் சட்டங்கள் முறைசார் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டால் தொழிலாளர்களுக்கு ஆகக்குறைந்த சம்பளமாக 1000 ரூபாவாவை பெற்றுக்கொள்வது இலகுவான விடயம்-  என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஜே.வி.பியால் முன்வைக்கப்பட்ட சபைஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” சம்பள விவகாரம் தொடர்பில் கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடத்தப்பட்டது.

அமைச்சர் தயா கமகே ஏதாவது ஒரு பொறிமுறையின் கீழ் 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தார். என்றாலும்இ அந்த சந்தர்ப்பத்தில் சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் பொறிமுறை எவ்வாறு அமையும் என்று பேசப்படவில்லை. இன்று நாள் முழுவது பெருந்தோட்டத் தொழில்துறை குறித்தும்இ அந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் இந்த சபையில் பேச முடியும்.
அநுரகுமாரவின் உரையில்இ அதிகமாக சம்பளத்துடன்இ மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. மலையக சமூகத்தின் வரலாற்றையும் பேசினார். இந்த நாட்டில் 1817ஆம் ஆண்டு பெருந்தோட்டங்களில் பிரித்தானியரால் மலையக மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.  இவ்வாறு மலைநாட்டில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் 1817 – 1917 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்ட சரியாக 100 வருடங்கள் அடிமைகளாகதான் வாழ்ந்தனர். பெருந்தோட்டத் தொழில்துறையை பிரித்தானியர் ஆண்டது போன்று அந்த சமூகத்தையும் ஆண்டனர். ரஷ்ய புரட்சியின் பின்னர் மலைகய மக்கள் மத்தியில் புரட்சி ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து வருகைதந்த ஊடகவியலாளர் கோ. நடேசஜயர் இந்த மக்கள் மத்தியில் சென்று தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கினர்.
தேயிலை தொழில்துறை ஆரம்பமாக கடந்த வருடம் 150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டது.   1972ஆம் ஆண்டுவரை பிரித்தானியர்தான் இந்த தொழில்துறையை நிர்வகித்தனர். 100 வருடங்கள் அடிமைகளாக இருந்த மலையக மக்கள் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த போது பிரஜாவுரிமை சட்டத்தின் கீழ் குடியுரிமையையும் இழந்தனர்;. 1972 ஆம் ஆண்டுவரை அரச பொறிமுறையில் இவர்கள் உள்வாங்கப்படவில்லை. அநுரகுமாரவின் உரையில் மலையக சமூகத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பில் பேசினார்.
நானும் ஒரு பட்டதாரிதான். 1972ஆம் ஆண்டுவரை ஏனைய சமூகங்களுக்கு இருந்த இலவசக் கல்வி எமக்கு இருக்கவில்லை. 1979 ஆம் ஆண்டு தோட்டப் பாடசாலைக்குதான் நான் சென்றேன். பிரித்தானிய தோட்டக் கம்பனிகள்தான் அதனை நிர்வகித்தன. அங்கு பாடம் எமக்கு நடத்தப்படவில்லை. வெறும் படங்களை மாத்திரம்தான் காட்டினர். அம்மா என்றுகூட எழுத்துக் கூட்டி எமக்கு படிப்பிக்கவில்லை. எனவேஇ அங்கு அவ்வாறுதான் கற்பித்தனர்.
இந்த 40 வருடத்தில் பாரிய போராட்டத்தை நடத்திதான் கல்விமுறையில் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளோம். இலவசக் கல்வி எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக 1979 தனது தந்தை வட்டகொட சிங்களப் பாடசாலையில் என்னை சேர்த்தார. அரசு மூலம் நிறைவேற்ற வேண்டிய எந்தவொரு  பொறுப்பு எமக்கு நிறைவேற்றவில்லை. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் வீடுகள் தொடர்பில் உள்ள குறைபாடுகள் சுகாதாரம் மற்றும் ஏனைய குறைபாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றோம். இன்றும் தோட்ட வைத்தியசாலைகள்தான் உள்ளன. அதனை பெருந்தோட்ட கம்பனிக்ள்தான் நடத்துகின்றன.
1972 ஆம் ஆண்டு முதல் 1992 ஆண்டு வரை அரசின் கீழான பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தம் தான் பெருந்தோட்டங்களை நிர்வகித்தது. இந்தக் காலப்பகுதியில் இத்தொழில்துறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. நான் பேசுவதை இனவாத ரீதியில் எவரும் பார்க்க வேண்டும். 1972-1992 ஆம் ஆண்டுக்கு உட்பட்ட காலப்பகுதியில் தோட்டத்துறையில் பெருந்தோட்ட நிலப்பரபை 50 இற்கும் குறைவாக பிரித்து உடரட்டஇ பாதரட்ட என்ற அடிப்படையில் பங்கிட்டனர்.  இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறுதோட்டங்களின் உரிமையாளர்களாக சிங்களவர்கள் மாறினர். 70வீதமான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உடரட்டயில்தான் உள்ளனர் (பெருந்தோட்டம்). பாத ரட்டயில்( சிறுதோட்ட உரிமையாளர்கள்) 2 ஏக்கர் வழங்க முடியும் என்றால் ஏன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஏக்க வழங்க முடியாது?. தேயிலை உற்பத்திய செய்யப்படும் 70வீதமான நிலப்பரப்பும் பெருந்தோட்டங்களில்தான் உள்ளன. ஆனால்இ உற்பத்தி செய்யப்படும் தேயிலையில் 30வீதமானவை மாத்திரமே இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பின்னர் 1992 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத்துறை 22 கம்பனிகளின் கீழ் தனியார் மயப்படுத்தப்பட்டது. பெருந்தோட்ட அமைச்சின் கிழ் இரண்டு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு குறித்;த 22 கம்பனிகளும் சரியாக நிர்வாகத்தை மேற்கொள்கின்றனவா? என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.  ஆனால்இ அந்த நிறுவனங்கள் அதனை செய்திருந்தால் அன்று 6 இலட்சமாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்று ஒரு இலட்சமாக மாறியிருப்பார்களா? வருமானம் குறைந்திருக்குமா? தோட்டங்கள் காடுகளாக மாறியிருக்குமா?. இன்று எமக்கு தேயிலை தோட்டத்தில் வருமானம் கிடைக்கவில்லை. தோட்டப் பெண்கள்இ இளைஞர்கள் வெளிநாடு சென்று வருமானம் உழைத்துதான் வாழ்கின்றனர்.
1992ஆம் ஆண்டு அந்த அமைச்சரவை பத்திரத்தின் ஊடாக பெருந்தோட்ட மனிதவுரிமைகள் அபிவிருத்தி நிதியம் என்ற நிறுவனமொன்று ஸ்தாபிக்கப்பட்டது. சம்பளத்துடன்இ எமது சமூகம் தொடர்பில் பேசும்போது இந்நிறுவனம் முக்கியமானது. இந்நிறுவனத்துக்கு கம்பனிகளால் ஒரு தொகை பணம் செலுத்த வேண்டும். அந்நிறுவனத்தின் தலைவரை மாத்திரமே அரசால் நியமிக்க முடியும். அந்நிறுவனத்தின் ஊடாகதான் இந்த சமூகத்துக்காக சேவைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இன்றுவரை அந்த பொறுப்புகள் கம்பனிகளால் நிறைவேற்றப்படுவதில்லை. இன்றுவரை 400 மில்லியன்களும் செலுத்த வேண்டியுள்ளது. அந்த 400 மில்லியனை அடுத்த பக்கத்திற்கு எடுத்தால் இந்த 1000 ரூபாவை பெற்றுக்கொடுக்க முடியும். இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் தற்போது அரசால்தான் செய்யப்படுகின்றன. அதற்காக அமைச்சொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைச்சின் கீழ்தான் இந்நிறுவனம் இயங்குகிறது. எனவேஇ அரசால் இந்நிறுவனம் இயக்கப்படுகின்ற போது எவ்வித சமூக சேவைகளும் இடம்பெறுவதில்லை. ஆகவேஇ அந்நிதியை பொருளாதார பக்கத்திற்கு திருப்பி சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் தொடர்;பில் பேசுகின்றோம். ஆனால் அதில் அடங்காத அவுட்குரோவர் முறையொன்று உள்ளது. இதில் அடிப்படைச் சம்பளம் என்று ஒன்றும் இல்லை. 12 நாட்கள்தான் வேலையும் வழங்கப்படுகிறது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் இந்த கம்பனிகளுடன் தமிழில் வேறு ஒரு உடன்படிக்கையும் செய்துகொள்கின்றன. எனவேஇ இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். சிறுதோட்ட உரிமையாளர்களின் நிலங்களகூட் இன்னமும் கம்பனிகளுக்கு சொந்தமாகதான் உள்ளன. வெறுமனே சம்பள விவகாரம் தொடர்பில் மாத்திரம் பேசுவதில் அர்த்தமில்லை.
அரசமைப்பு மீறப்பட்ட சந்தர்ப்பத்தில் உயர்நீதிமன்றம் சென்று நீதியான தீர்ப்பை பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால்இ சட்டத்தரணியும்இ தொழிற்சங்கவாதியுமான தம்பையாஇ கூட்டு ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருக்கும் போது அதனை நீதிமன்றத்தினூடாக அந்த கூட்டு ஒப்பந்தத்தின் தரப்புகளான தொழில் வழங்குநருக்கோ கம்பனிகளுக்கோ அல்லது தொழிலாளர்கள் சார்பாக கையொப்பமிடும் தொழிற்சங்கங்களுக்கோ அல்லது நேரடியாக தொழிலாளர்களுக்கோஇ நீதிமன்றத்தினூடாக கூட்டு ஒப்பந்தத்தை முடிவுறுத்தவோ கேள்விக்கு உட்படுத்தவோ முடியாதுஇ கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது முதலாளிமார் சம்மேளனம் தொழில் ஆணையாளருக்கு அறிவிப்பதன் மூலமே அதனை முடிவுறுத்த முடியும் என்று கூறியிருந்தார்.
எனவேஇ இந்த முறைமையில் நீதிமன்றம்கூட தலையீடு செய்ய முடியாது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து முதலாளிமார் சம்மேளனம் அல்லது தொழிற்சங்கங்கள் வெளியேறும்வரை இதனை மாற்றம் செய்ய முடியாது என்று நீதிமன்றமே சொல்கிறது. 1000இ500இ1500 என்பது பிரச்சினை அல்ல. நாடாளுமன்றில் இதனை வெளிப்படைவாக அல்ல திறந்தமுறையில் விவாதிக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளமாக 400 தான் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சட்டத்தில் உள்ளதாக அரசு கூறுகிறது. தற்போது 500 ரூபா பெற்றுக்கொடுப்பதாகவும் கூறுகின்றனர். அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பரிசீலிப்போமென கூறியுள்ளார். எனவேஇ அந்தச் சட்டத்தை திருத்தி 1000ரூபா ஒரு நாளைக்கு குறைந்த பட்ச சம்பளமாக மாற்றும் நடவடிக்கையை உடனடியாக செய்வோம்.  எனவேஇ இந்தப் பொறிமுறையில்தான் பிரச்சினையுள்ளது. அரசு மத்தியஸ்;தம் செய்யும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு பொறிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மாற்றங்கள் செய்தால் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை பெற்றுக்கொள்வது இலகுவானதாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *