இஸ்லாத்துக்கு எதிராக சீனா இரகசிய போர்தொடுப்பு! ஐந்தாண்டு திட்டம் எதற்கு?

நாடு முழுக்க இஸ்மியர்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான அரசியல் பிரச்சாரத்தை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தை `சீனமயமாக்கும்’ முயற்சியின் – இஸ்லாமிய நம்பிக்கையை அதிக `சீன சார்பானதாக’ ஆக்கும் – புதிய ஐந்தாண்டுத் திட்டம் இறுதி செய்யப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளுக்கு ஒத்திசைவு கொண்டதாக அதை மாற்றுவது என்பது இதன் அர்த்தமாகும்.

ஐந்தாண்டுத் திட்டம் குறித்த செய்தி – விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை –

வரைவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு சீன இஸ்லாமிய சங்கத்தின் இணையதளத்தில் செய்திக் குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை – அதிபர் ஜி ஜென்பிங் கருத்துகளை எதிரொலிக்கும் வகையில் உள்ள நடவடிக்கை- சர்வதேச அளவில் ஆய்வுக்கான தேவையை எழுப்புவதாக உள்ளது.

குறிப்பாக மத்திய ஆசிய எல்லையில் சீனாவின் மேற்குப் பகுதியில் தொலைதூரத்தில் உள்ள ஜிங்ஜியாங்கில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் இதற்கான அவசியம் எழுந்துள்ளது.

2015ல் ஜி -யின் அழுத்தமான வலியுறுத்தலைத் தொடர்ந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், புத்த மதம் போன்ற வெளிநாட்டு மதங்களை சீனயமாக்கும் முயற்சிகளில் கட்சியின் ஒரு பிரிவான – ஐக்கிய முன்னணி பணி துறை – கவனம் செலுத்தியது.

ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் வாய்ப்புள்ள விஷயங்களை அமைதிப்படுத்துதல் அல்லது தன்யமாக்கல் பணியை அந்தப் பிரிவு மேற்கொண்டுள்ளது.

ஐந்தாண்டு திட்டம் என்ன?

இதற்கான வரைவுத் திட்டம் இஸ்லாத்தை அதிகளவில் “சீனமயமாக்குவதை” நோக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சீன கம்யூனிஸ்ட் வழக்கங்கள் கலந்ததாக மதத்தை ஆக்கும் முயற்சியும் இதில் அடங்கியிருப்பதாக – இஸ்லாமியர்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும், பிரதிநிதித்துவ அமைப்பாக உள்ள சீன இஸ்லாமிய சங்கம் தெரிவித்துள்ளது.

இஸ்லாத்தை சீனமயமாக்குவது என்பது “நம்பிக்கைகள், வழக்கங்கள் அல்லது இஸ்லாத்தின் சித்தாத்தங்களை மாற்றுவது கிடையாது.

ஆனால் சோஷலிச சமூகத்துடன் ஒத்திசைவு கொண்டதாக அதை மாற்றுவது” என்று பெய்ஜிங்கை சேர்ந்த சீன இஸ்லாமிய கல்வி நிலையத்தின் துணை டீன் காவோ ஜான்பு கூறியதாக, சீனாவின் தேசிய பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகை ஜனவரி 6 ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.

சீனவில் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் “தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை மேம்படுத்திக் கொள்வது மற்றும் கட்சியின் தலைமையைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் மதத்தை சீனமயமாக்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்று பத்திரிகையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஐந்தாண்டுத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் எதை எதிர்பார்க்கலாம் என்பது பற்றி சில தகவல்களையும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

“சோஷலிசத்தின் அடிப்படை விஷயங்கள்,” சட்டங்கள், பாரம்பரிய கலாச்சாரம் குறித்து சொற்பொழிவுகளும், பயிற்சிகளும் இருக்கும் என்று சீன இஸ்லாமிய சங்கத்தின் தலைவர் யாங் பேமிங் தெரிவித்துள்ளார்.

“நேர்மறை உத்வேகம்” உள்ள பிரகாசமான அம்சங்களைக் குறிப்பிடும் விஷயங்களில் இஸ்லாமியர்கள் “வழிநடத்திச் செல்லப்படுவார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை சீனமயமாக்கும் அம்சங்கள் பற்றி “நம்பிக்கையாளர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்குவதற்கு” மசூதிகளில் புத்தகங்கள் அளிக்கப்படும் என்று காவோ தெரிவித்தார்.

ஐந்தாண்டுத் திட்டத்தின் கூடுதல் விவரங்கள் ரகசியமாக உள்ள நிலையில், காலப் போக்கில் அவை வெளியிடப்படும் என்று குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

கிறிஸ்தவ மதத்தின் மீது கடந்த ஆண்டு அமுல் செய்யப்பட்ட இதேபோன்ற ஐந்தாண்டுத் திட்டத்தை நினைவுபடுத்துவதைப் போல இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

கிறிஸ்தவர்கள் தங்களுடைய மதம் மற்றும் சோஷலிச மாண்புகளுக்கு இடையே உறவை ஏற்படுத்துவது, இறையியல் அடித்தளத்தை இன்னும் ஆழப்படுத்துவது, இறையியல் கல்வியை ஒழுங்குபடுத்துவது, `

`சீனவின் தன்மைகளுடன்” நம்பிக்கையை வளர்ப்பது மற்றும், இரக்க குணத்தில் கவனம் செலுத்துவது என்ற ஐந்து அம்சங்களைக் கொண்டதாக இந்தத் திட்டம் இருக்கிறது.

சீன மொழி ஊடகங்களில் இந்த ஐந்தாண்டுத் திட்டம் பற்றிய கூட்டம் வெளியானதாக கவனத்திற்கு வரவில்லை.

இஸ்லாத்தை சீனமயமாக்குவது பற்றி 2018 முழுக்க சீன ஊடகங்கள் செய்தியாக்கி வந்த நிலையில்,

குறிப்பாக இன-மத தீவிரவாதத்தால் உந்தப்பட்ட பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இது முக்கியமான அம்சம் என்று சீன அதிகாரிகள் கூறி வந்த நிலையில், இதுபற்றி செய்தி வெளியாகாமல் இருப்பது அசாதாரணமானதாகக் கருதப்படுகிறது.

குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் ஆங்கில இதலில் இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் அதன் சீன மொழி பதிப்பில் வெளியாகவில்லை.

இதுகுறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு அரசு முயற்சிக்கிறது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

குளோபல் டைம்ஸ் – மற்றும் வெளிப்படையாகப் பேசும் அதன் முதன்மை ஆசிரியர் ஹூ ஜிஜின் – ஜின்ஜியாங் முகாம்கள் பற்றி சீனாவின் கருத்துகளை கடந்த அரையாண்டு காலமாக முதன்மைத்துவத்துடன் வெளியிட்டனர்.

அந்தப் பகுதியில் உய்குர் இஸ்லாமியர்களுக்கு பெரிய அளவிலான பாதுகாப்பு முகாம்கள் இருப்பது பற்றி பி.பி.சி. உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கியதில் இருந்து இந்தச் செய்திகள் வெளியாகி வந்தன.

ஜின்ஜியாங் முகாம்களுக்குச் செல்ல அந்தப் பத்திரிகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அங்குள்ள முகாம்கள் “அடிப்படைவாத மனப்போக்கை மாற்றும்” தேவைக்காக நடத்தப்படும் தொழிற்பயிற்சி மையங்கள் தானே தவிர, வேறெதுவும் கிடையாது என்று ஹூ கூறியுள்ளார்.

வருடாந்திர இஸ்லாமிய கூட்டத்தில் யார் பங்கேற்றது?

பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் உள்புற மங்கோலியா, ஜியாங்சு, ஹுனான், குவாங்டாங், யுன்னன், குயிங்ஹாய் மாகாங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தன்னாட்சி பெற்ற ஜின்ஜியாங் பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ளபோதிலும் அங்கிருந்து யாரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதத்தை சீனமயமாக்குவதில் என்ன உள்ளது?

மதத்தை சீனமயமாக்குவது என்ற சிந்தனை 2015ல் ஐக்கிய முன்னணி பணித் துறையின் கூட்டத்தில் ஜி ஆற்றிய உரையில் முதலில் தெரிவிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் வாழும் சீன தேசத்தவர்கள், மத அமைப்புகள், தனிச்சிறப்பான அறிவுஜீவிகள் மற்றும் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்களை இலக்காகக் கொண்டு இந்தப் பிரிவு செயல்படுகிறது.

இந்தத் துறைக்கு மதம்- தொடர்புடைய செயல்திட்டத்தை தனது உரையில் ஜி கோடிட்டுக் காட்டினார். முக்கியமான நான்கு விஷயங்களில் முதலாவது விஷயமாக சீனமயமாக்கல் அம்சத்தை அவர் குறிப்பிட்டார்.

சட்டத்தின் ஆட்சியை வலியுறுத்துவது, சமூகத்தில் மதத்தைப் பயன்படுத்துவதை மதிப்பிடுவதற்கு மார்க்சிய கண்ணோட்டத்தைப் பயன்படுத்துவது,

சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் மதப் பிரமுகர்களின் பங்கை ஊக்குவிப்பது ஆகியவை மற்ற மூன்று விஷயங்களாக இருந்தன.

அப்போதிருந்து, ஐக்கிய முன்னணி பணித் துறை மசூதிகளில் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது. கடந்த ஆண்டில் இருந்து இஸ்லாமிய தலங்களில் “நான்கு வாயில்கள்” என்ற சிந்தனையை கட்டாயமாக்கத் தொடங்கியுள்ளதும் இதில் அடங்கும்.

தேசியக் கொடி, சீன அரசியல்சாசனம் மற்றும் சட்டங்கள், சோஷலிசத்தின் அடிப்படை மாண்புகள் மற்றும் பாரம்பரிய சீன மாண்புகள் ஆகியவை இதில் அடங்கும்.

நடைமுறையில், தேசியக் கொடியை “பிரதானமாக” காட்சிப்படுத்துவது, சோஷலிசம் பற்றி மசூதிகளில் தகவல்களை வைப்பது, “பெண்களுக்கு மரியாதை கொடுப்பது” உள்ளிட்ட விஷயங்களை விளக்குவதற்கு, வழிகாட்டுதல்களுக்கு ஏற்பாடு செய்வது என்பவை இதில் இருக்கும்.

இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில், 2018 மே மாதம் வெளியான ஒரு கட்டுரையில் சீன இஸ்லாமிய சங்கம் திரும்பத் திரும்ப குரானை மேற்கோள் காட்டியுள்ளது.

தேசபக்தி, வாக்குறுதிகளின்படி நடப்பது, நேர்மை மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றை குரான் வலியுறுத்துகிறது என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சீனாவை அறிவின் ஆதாரம் என்று அதில் சிறப்பாக குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.

இதில் கடைசி விஷயம் சரியானதாக இல்லை – குரானில் சீனா என குறிப்பிடவில்லை. “சீனா வரை சென்றும் ஞானத்தை தேடு” என்று முகமது நபி கூறியதாக அரபி பழமொழி கூறினாலும், மேலே உள்ளவாறு சீனா பற்றி குறிப்பிடவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *