ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு ‘கல்லூரி கீதம்’ உருவாக்கம்!

பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியியற் கல்லூரியின் வரலாற்றில், முதன்முறையாக கல்லூரிக்கென கல்லூரி கீதம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் உத்தியோகபூர்வ வெளியீடு கல்லூரியின் முதல்வர் திருமதி ரமணி அபேநாயக்க தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

தமிழ், சிங்கள மொழியில் கல்லூரியின் கீதம் இயற்றப்பட்டுள்ளது.

விரிவுரையாளர் பரசுராம் ,விரிவுரையாளர் உதயகுமார் ஆகியோரினால் உருவான கல்லூரி கீதத்தை சிங்கள மொழியில் நளின் பண்டார , சரஸ்டீன் ஆகியோர் ஆக்கம் செய்துள்ளனர்.

கல்லூரியில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில்,

கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி ஏ.சுந்தரலிங்கம் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சிவ.ராஜேந்திரன் இந்நாள் பீடாதிபதி மற்றும் மட்டக்களப்பு கல்வியியற் கல்லூரியின் விரிவுரையாளர்கள்,

யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி வீ.அமிர்தலிங்கம் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலாநிதி பொன் சிங்கரட்ணம் முன்னாள் அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் முதல்வர் எஸ்.ஜெயக்குமார் உட்பட விரிவுரையாளர்களும் ஆசிரிய பயிலுனர்களும் கலந்து கொண்டனர்.

கல்லூரி கீத வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பீடாதிபதி ரமணி அபேநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

கல்லூரி வரலாற்றில் முதல்தடவையாக கல்லூரிக்கென கீதம் இயற்றுவதற்காக பாடுபட்ட விரிவுரையாளர்கள் மற்றும் ஏனையோரின் பணி போற்றுவதற்குரியதாகும். அதற்காக உழைத்த அனைவருக்கும் நன்றியினை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

கொட்டகலை நிருபர் தி.தவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *