100 இற்கும் மேற்பட்ட மலைகள் ஏறிய பிகினி உடை வீராங்கனை பலி!

பிகினி உடை மலையேற்ற வீராங்கனை கிகி வூ மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.

தைவான் நாட்டை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை கிகி வூ (வயது 36).  இவர் மலை சிகரத்தில் ஏறும்பொழுது அதற்கான உடைகளை அணிந்து செல்வார்.
பின்னர் உச்சிக்கு சென்ற பின் தன்னிடம் உள்ள பிகினி உடைகளை அணிந்து கொண்டு செல்ஃபி எடுத்து கொள்வார்.
இந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்.  இதனால் பிகினி உடை மலையேற்ற வீராங்கனை என்ற பட்டப்பெயரும் இவருக்கு உள்ளது.
கடந்த வருடம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த 4 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட மலை சிகரங்களில் ஏறியுள்ளேன்.
என்னிடம் 97 பிகினி உடைகளே உள்ளன.  அதனால் தற்செயலாக சிலவற்றை மீண்டும் அணிந்து உள்ளேன் என வூ தெரிவித்து உள்ளார்.
நீங்கள் மலை உச்சிக்கு சென்ற பின் பிகினி உடையை ஏன் அணிகிறீர்கள்? என கேட்டதற்கு, அது மிக அழகாக உள்ளது.  அதனை ஏன் விரும்ப கூடாது? என கூறினார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் தைவான் நாட்டில் உள்ள யூஷான் தேசிய பூங்காவில் உள்ள மலை சிகரத்தில் ஏறியுள்ளார்.  அதன்பின் தனது சேட்டிலைட் போனில் நண்பர்களுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.
இதில், 100 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் உடலின் கீழ் பகுதியை அசைக்க முடியவில்லை என தெரிவித்து உள்ளார்.  அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து மீட்பு படையினர் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.  இந்த நிலையில் அவரது உயிரற்ற உடலை அவர்கள் கண்டனர்.
ஆனால் வானிலை மோசமடைந்த நிலையில் அங்கு செல்ல முடியவில்லை.  தொடர்ந்து அவரது உடலை மீட்கும் முயற்சியில் அவர்கள் இன்று இறங்கியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *