வாகரைப் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் வாவியிலிருந்து சடலமாக மீட்பு!

வாகரைப் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான குமுதலெட்சுமியின் கணவர், வாவியிலிருந்து இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

வாகரை, அழகாபுரியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான காளிக்குட்டி சுதாகரன் (வயது – 38) என்பவரே சடலமான மீட்கப்பட்டவராவார்.

மீன்பிடித் தொழிலாளியான இவர், தட்டுமுனை ஆற்றில் இறால் பிடிப்பதற்காக வலை கட்டுவதற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்தார்.

இதனையடுத்து பொலிஸாரும், மீனவர்களும், பிரதேச பொதுமக்களுமாகத் தேடியும் காணாமல்போனவரைப் பற்றிய எதுவித தயடங்களும் கிடைத்திருக்காத நிலையில், தட்டுமுனை வாவியிலிருந்து இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் வலிப்பு நோய்க் குணம் உள்ளவர் என்று உறவினர்கள் தெரிவித்தனர். ஆற்றில் வலை கட்டும்போது வலிப்பு நோய் ஏற்பட்டதன் காரணமாக இவர் வாவியில் வீழ்ந்து, சேற்றில் புதையுண்டிருக்கலாம் என உறவினர்கள் ஊகம் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவம் பற்றிய விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *