கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்கலாம்!

சீனா- வுஹான் நகர ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற அச்சத்தை முதன் முறையாக சீனா அமைச்சர்கள் வெளியிட்டுள்ளனர்.

வுஹான் நகர உணவு சந்தயில் இருந்து இதுபோன்ற கொடூர வைரஸ் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என கருதும் சில சீனத்து அமைச்சர்கள்,

அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த கருத்தை பிரித்தானியாவின் COBRA அமைப்பின் உறுப்பினர் ஒருவரும், சாத்தியக்கூறுகள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் உண்மை தன்மை தொடர்பிலும் ஒரு பின்னணி இருக்கலாம் என அந்த COBRA அமைப்பின் உறுப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மட்டுமின்றி வுஹான் நகரில் சக்தி வாய்ந்த ஒரு நுண் கிருமிகள் ஆய்வகம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வுஹான் நகரில் அமைந்துள்ள குறித்த நுண் கிருமிகள் ஆய்வகமானது உலகின் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆய்வகமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக சீன அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்படும் உணவு சந்தையில் இருந்து வெறும் 10 மைல்கள் தொலைவிலேயே இந்த ஆய்வகம் அமைந்துள்ளது.

மட்டுமின்றி கடந்த 2018 ஆம் ஆண்டு சீன அரசாங்கமே நடத்திவரும் பத்திரிகையில், எபோலா வைரஸ் போன்ற ஒரு கிருமியை தங்களால் மிக எளிதாக வுஹான் ஆய்வகத்தில் வைத்து உருவாக்க முடியும் என மார் தட்டியிருந்தது.

இதே ஆய்வகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில், சார்ஸ் வகை கிருமி ஒன்று கசிந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 9 பேருக்கு அதன் பாதிப்பு இருந்தது.

இச்சம்பவத்தை அடுத்து, சீன அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டதுடன், 5 உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *