13 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார் திஸர!

இலங்கை அணியின் சகலதுறை வீரர் திசர பெரேராவின் அதிடியையும் தாண்டி, நியூசிலாந்து அணி 21 ஓட்டங்களால் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. அத்துடன், ஒருநாள் தொடரையும் 2-0 என கைப்பற்றியுள்ளது.

பே ஓல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியநியூசிலாந்து அணி கொலின் மன்ரோ,

ஜேம்ஸ் நீஷம் மற்றும் ரோஸ் டெய்லர்ஆகியோரின் அபார ஆட்டங்களின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி திசர பெரேராவின் கன்னி தசம்மற்றும் தனுஷ்க குணதிலக்கவின் அரைச்சதம் அடங்கலாக 298 ஓட்டங்களை பெற்று, 21 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரையில், முதல்போட்டியில் சதமடித்திருந்த மார்ட்டின் கப்டில், அணித் தலைவர் கேன்வில்லியம்சன் ஆகியோரது விக்கெட்டுகள் போட்டியின் முதல் 10 ஓவர்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

எனினும், கொலின் மன்ரோ மற்றும் ரோஸ்டெய்லர் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கி, ஓட்டங்களைகுவித்தனர்.

இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்காக 112 ஓட்டங்களைபகிர்ந்தனர்.  இதில் கொலின் மன்ரோ அதிரடியான ஆட்டத்தைவெளிப்படுத்தி 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து, குசல் பெரேராவின்சிறந்த களத்தடுப்பின் மூலமாக ரன்–அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இவரின் ஆட்டமிழப்பை தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தைவெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் அரைச்சதம் கடக்க, இதற்குஅடுத்தப்படியாக களமிறங்கிய ஹென்ரி நிக்கோலஸ், 34 ஓட்டங்களுடன்ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, 90 ஓட்டங்களை பெற்றிருந்த ரோஸ் டெய்லர்துரதிஷ்டவசமாக ரன்–அவுட் மூலமாக ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் ஜேம்ஸ் நீஷம் அதிரடியாகதுடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களை பெற்று, ரன்–அவுட் மூலமாக ஆட்டமிழக்க, இறுதியாக தனது பங்கிற்கு டீம் செய்பர்ட் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துஅணியின் ஓட்ட எண்ணிக்கையை 319 ஆக உயர்த்தினார்

. இலங்கைஅணியின் பந்துவீச்சை பொருத்தவரை, லசித் மாலிங்க 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நுவான் பிரதீப் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார். ஆட்ட நாயகனான திஸர பெரேரா செயற்பட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *