இராணுவ தொப்பியுடன் களமிறங்கிய இந்திய அணி! பாகிஸ்தான் போர்க்கொடி!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

காஷ்மீரில் உள்ள புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3– ஆவது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர்.
ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ட தொப்பியை விக்கெட் காப்பாளர் டோனி வழங்கினார்.
இராணுவத்தில் கௌரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை இராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.
இராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி,
‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம். இதே போல் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.
இந்நிலையில், இராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *