சகுனியாக சந்திரிக்கா – பதறுகிறது மஹிந்த அணி!

அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இறங்கியுள்ளார் என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது.

அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே கூட்டு எதிரணி எம்.பியான செஹான் சேமசிங்க மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” சுதந்திரக்கட்சியிலுள்ள எம்.பிக்கள் சிலர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். இக்குழுவை சந்திரிக்காவே வழிநடத்துகின்றார். இதற்கான தேவைப்பாடு என்னவென்பது புரியவில்லை. இருந்தாலும் அவர் சூழ்ச்சி செய்கிறார் என்பது தெளிவாகின்றது.

கடந்தகாலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் ஆரம்பம் மாத்திரமே. இனிதான் அடுத்தக்கட்டங்கள் அரங்கேறும். எனவே, கூட்டு எதிரணி வழிப்பாக இருக்கவேண்டும்.

தனிநபருடன் ( மஹிந்தவுடன்) இருக்கும் பகைமை காரணமாகவே நாட்டையும், கட்சியையும் மறந்து சந்திரிக்கா செயற்படுகின்றார்.” என்றும் செஹான் எம்.பி. குறிப்பிட்டார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *