நேபாளத்தில் மாணவர்கள் சென்ற பஸ் கவிழ்ந்ததில் 16 பேர் மரணம்!

மேற்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில், கல்வி சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டாங் மாவட்டத்தில் கோராஹி பகுதியில் கிருஷ்ணாசென் இச்சுக் தொழில்நுட்பபள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி சார்பில் 31 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சல்யான் மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு கல்விச் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, டாங் மாவட்டத்தின் துல்சிபூர்- காபூர் கோட் சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலைதடுமாறிய பஸ் அருகிலுள்ள 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 16 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *