‘தேசிய ஜனநாயக முன்னணி’ யை அரசியல் கட்சியாகப் பதிவுசெய்ய ஐ.தே.க. மத்தியசெயற்குழு அனுமதி!

ஐக்கிய தேசிய முன்னணியை, ‘ தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் மத்தியசெயற்குழு இன்று (21) அனுமதி வழங்கியது.

ஐக்கிய தேசியக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக்கூட்டம் கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க  தலைமையில் இன்றுமாலை  கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

புதிய அரசின் செயற்பாடுகள் , எதிர்காலத் திட்டங்கள், அமைச்சரவை நியமனம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சிக் கட்சி தலைமையில் தற்போது செயற்படும் அரசியல் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியை, ‘ தேசிய  ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இது குறித்து பங்காளிக்கட்சிகளுடன் அடுத்துவரும் நாட்களில் பேச்சுகள் நடத்தப்படவுள்ளன.

அதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான நிர்வாகத்தேர்வும் இடம்பெற்றது. பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், உபதலைவராக ரவிகருணாநாயக்கவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐ.தே.கவின் தொழிற்சங்க நடவடிக்கை பிரிவு பாலித ரங்கே பண்டாரவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *