கொழும்பு மாநகரத்தில் 2,000 ​பொலிஸ் குவிப்பு!

கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, மக்களின் பாதுகாப்புக்காகவும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளுக்காவும் கொழும்பு மாநகரம் முழுவதும் 2 ஆயிரம் பொலிஸார் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட நடவடிக்கைகளின்போது, சிவில் உடையணிந்த பொலிஸ் அதிகாரிகளும் விசேட பொலிஸ் ​குழுக்களும் கொழும்பு முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பொதுமக்களுக்கு, ​பொதுப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் சம்பந்தமாக, இம்முறை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *