ஐ.தே.மு. மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறினால் பெப்ரவரி 4இற்கு முன் புதிய அரசமைப்பு! – கூட்டமைப்பிடம் ரணில் வாக்குறுதி

“ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறினால் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி அதாவது இலங்கையின் 71ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதனூடாக இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்தார் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பின்போது ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஆதரவு அளிப்பதற்குப் பிரதியுபகாரமாகத் தாங்கள் எதிர்பார்க்கும் விடயங்களை இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவிடம் எடுத்துரைத்தனர். அவை குறித்து சாதகமாகத் தாம் பரிசீலிப்பார் எனத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *