சபையில் ‘ஓம்’ போட்ட சம்பந்தன் – ரணிலை பிரதமர் என விளித்த விமல்
நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவுக்குழு தொடர்பான வாக்கெடுப்பின்போது சில சுவாரஷ்யமான சம்பவங்களும் பதிவாகின.
பெயர்கூவி வாக்கெடுப்பை நடத்துமாறு எதிர்க்கட்சி பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.எனினும், நேரவிரயத்தைக்கருத்திற்கொண்டு இலத்திரனியல் வாக்கெடுப்பை நடத்தும் முடிவை – சபையின் அனுமதியுடன் சபாநாயகர் எடுத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தமன், காமினி ஜயவிக்கிரம பெரேரா உட்பட ஐந்து எம்.பிக்கள் அளித்த வாக்கு இயந்திரத்தில் பதிவாகவில்லை. இதனால், இலத்திரனியல் வாக்கெடுப்பின் முடிவில் மேற்படி எம்.பிக்களிடம் , ஆதரவா – எதிர்ப்பா என்று வாய்மூலம் கேட்கப்பட்டது.
சம்பந்தனின் பெயர் விளிக்கப்பட்டபோது ‘ சப்போட்’ என்றார். அதன்பின்னர் சிரித்தப்படியே ‘ஓம்’ …’ஓம்’…என்றார். அவ்வாறு அறிவித்துவிட்டு கூட்டமைப்பு எம்.பிக்களை நோக்கி பார்த்தார். அவர்களும் சிரித்துவிட்டனர்.
அதேவேளை, சபாநாயகரின் அறிவிப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு கடுந்தொனியில் உரையாற்றிய விமல்வீரவன்ஸ ஒருகட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு என்று அறிவித்தார். இதையடுத்து ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் மேசைகளில் தட்டி, விமலே ஒப்புக்கொண்டுள்ளார் என கூச்சலிட்டனர்.