சபாநாயகர் கருவின் மறுபக்கம்!

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு அடிபணியாது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக காத்திரமான நடவடிக்கைகளை சபாநாயகர் கருஜயசூரிய முன்னெடுத்துவருகின்றார்.

சபாநாயகராக தெரிவாகிய பின்னர், ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகத்துக்கு ஒருநாள்கூட அவர் சென்றதில்லை. கட்சி உறுப்பினராக இருக்கின்றபோதிலும் மத்தியக்குழுக் கூட்டங்களில் பங்கேற்கவில்லை.

கருஜயசூரியவின் வாழ்க்கை வரலாறு தொகுப்பு….

 

கரு ஜயசூரிய
பதவி : இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தின் சபாநாயகர்
பிறந்த திகதி : 1940 செப்டெம்பர் 29
கல்விப் பின்புலம் : கொழும்பு ஆனந்த கல்லூரியில் கல்வி பயின்றார்.

– ஐக்கிய இராச்சியம், பட்டைய கப்பல் முகவர்களுக்கான நிறுவனத்தின் உறுப்பினர்
– போக்குவரத்து நிறுவனத்தின் உறுப்பினர்
– INSEAD பிரெஞ்சு வியாபார கல்லூரியின் பழைய மாணவர்

பொதுச் சேவை : – இலங்கை ஆயுதப்படையினபொறுப்புரிமையளிக்கப்பட்ட அதிகாரி CVF 1965-1972
– 52 தனியார் துறை மற்றும் அரச பகிரங்க விலையகர் கம்பனிகளில் தவிசாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி/பணிப்பாளராக சேவையாற்றினார்.
– 1992 – 1994 வரை அவுஸ்திரியா மற்றும் சுவிட்சலாந்து ஆகிய நாடுகளுக்கான தத்துவமளிக்கப்பட்ட ஜேர்மனிக்கான இலங்கை தூதுவராக கடமையாற்றினார்.
– தனியார் மயப்படுத்தல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராக சேவையாற்றியதோடு இலங்கையின் முதலாவது தனியார் கம்பனியான யுனைடட் மோட்டர்ஸ் லிமிரெட்டுக்குத் தலைமை தாங்கினார்.
– வர்த்தகம் மற்றும் கைத்தொழிலுக்கான தேசியப் பேரவையின் தலைவராக சேவையாற்றினார்.
அரசியல் வாழ்வு : – 1997ஆம் ஆண்டில் கொழும்பு நகர பிதாவாக நியமிக்கப்பட்டதோடு 1999 வரை இந்த பதவியை வகித்தார்.
– 1999-2001 வரை மேல் மாகாணச் சபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

– 2001ஆம் ஆண்டில் பாராளுமன்றத்துக்குப் பிரவேசித்தார்.

தற்போது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பின்வரும் பதவிகளை வகித்தார்.

– 2001 முதல் 2004 வரை மின் வலு, எரிசக்தி அமைச்சர்
– 2007 முதல் 2008 வரை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
– ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மற்றும் அதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பிரதித் தலைவர்.
– 2013இல் ஐ.தே.க.வின் தலைமைத்துவப் பேரவையின் தவிசாளராக பதவி வகித்த போது கட்சியின் மீள் ஒழுங்கமைப்பை தலைமையேற்று நடத்தினார்.
– பொது நிர்வாக, மாகாண சபைகள், ஜனநாயக ஆட்சி அமைச்சர் மற்றும் 2015ஆம் ஆண்டில் புத்த சாசன அமைச்சர்

வகித்த பிற பதவிகள் : 1. பேரவைகள் மற்றும் கைத்தொழில் சம்மேளத்தின் பிரதித் தலைவர்
2. SAARC வர்த்தகப் பேரவையின் தவிசாளர்
3. கொழும்பு இறப்பர் வர்த்தகர் ஒன்றியத்தின் தவிசாளர்
4. சீனி இறக்குமதியாளர் ஒன்றியத்தின் தவிசாளர்
5. இலங்கையின் முதலாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கு EXPO 92 தலைமை தாங்கினார்
6. இலங்கை வியாபார அபிவிருத்தி நிலையத்தின் தவிசாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *