பிரதமருக்குரிய ஆசனம் மஹிந்தவுக்கு – நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருகிறது ஜே.வி.பி.!

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

ஆளுங்கட்சி வரிசையில் பிரதமருக்குரிய ஆசனத்தில் மஹிந்த ராஜபக்சவே அமர்வார். அத்துடன், ஏனைய எம்.பிகளுக்குரிய ஆசனங்களிலும் மாற்றம் வரவுள்ளது.

அரசமைப்புக்கு முரணானவகையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஜே.வி.பி., சபாநாயகர் கருஜயசூரியவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கவுள்ளது.

அதேவேளை, சபை கூடுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் , நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி, கூட்டுஎதிரணி ஆகியவற்றின் நாடாளுமன்றக்குழுக் கூட்டமும் தற்போது நடைபெற்றுவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *