அதிர்ச்சி வைத்தியர் கண்ட…! அதிர்ச்சி வைத்தியம்!!

அதிர்ச்சி வைத்தியருக்கே அதிர்ச்சி கொடுத்தது இன்று (13) வெளியான உயர் நீதிமன்றின் தீர்ப்பு. இலங்கை வரலாற்று காலனித்துவ ஆட்சியின் பின்னர் பிரித்தானியா வசமிருந்து பறித்தெடுத்த நாம் அதை பயன்படுத்திய விதங்கள் பலவிதமாயிற்று.

 
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்திருந்த போதிலும் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதைப் போன்று 1978 ஆம் ஆண்டு ஓர் அடிமைச் சித்திரத்தை நமது ஆட்சியாளர்கள் வரைந்து விட்டு சென்றுவிட்டனர்.
 
அதுதான் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி முறைமை. அதாவது, “ஒரு ஆணை பெண்ணாக மாற்ற முடியாது, பெண்ணை ஆணாக மாற்ற முடியாது” எனும் பெருங் கோட்பாட்டை உள்ளீடாகக் கொண்ட இந்த முறைமையை அடிப்படையாகக் கொண்டே அன்றிருந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன தனது ஆட்சியின் போது பாராளுமன்றின் அறுதிப் பெரும்பான்மையூடாக நிறைவேற்றி, தான் ஒரு நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக கம்பீரமாக செயலாற்றினார்.
 
எவ்வளவுதான் பெரிய ஆட்சியாளராக இருந்தாலும், “மனிதன் சட்டம் இயற்ற தகுதியற்றவன், சட்டம் இயற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது, மனிதன் இயற்றுகின்ற சட்டங்களில் ஏதோ தவறு இருக்கும்” என்ற வான் மறை வசனத்தின் பிரதிபலிப்பு என்றும் பொய்யாகிடாது என்பதை இன்று இந்த யாப்பு உணர்த்தியுள்ளது.
 
இதை இந்த யாப்பு அன்றும் உணர்த்தியிருந்தது, இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரம் என்ற சிம்மாசனத்தில் உட்கார்ந்த அந்த நாட்களிலியை சூடேற்றிய எவரும் அந்த ஒரு விடயத்தை திருத்தியமைக்க முன்வரவில்லை.
 
அப்படி முன்வந்திருந்தால் அவர்களின் சொகுசுகள் தீக்கிரையாகிடும் என்ற பீதியில் தங்கள் வசதிக்கேற்றால் போல் வாழ்ந்து சென்றுவிட்டனர். இதில் இன்றும் ஒரு ஏக்கப் பறவையாக வாழும் ஒருவரே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவருக்குப் பின்னர் அதிரடி சூரராய் அதிரவைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பல்வேறு உத்திகளையும் பயன்படுத்தி இந் நிறைவேற்று அதிகார முறைமையின் கால வரையை நீடித்துக் கொள்ளலாம் என முயற்சித்தார் அது கைகூடவில்லை.
 
இருந்தபோதிலும், அந்த ஜனாதிபதி ஏங்கித் தவிக்கிறாராம் என்று இந்த ஜனாதிபதி சும்மா இருந்திடவில்லை. அவரின் ஏக்கம் முன்னாள் மஹிந்த ராபக்ஷவுக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது.
 
அந்த தாக்கத்தின் வெளிப்பாடு, அடாது பாடுபட்டு விடாது பிடித்த பொறியாக செயற்பட்டார். குறிப்பிட சில வருடங்களாக அவரின் முயற்சியின் பலன் கடந்த ஒக்டோபர் 26 ம் திகதி தற்போதைய ஜனாதிபதி மைத்தியிரின் மந்திராலோசனை மூலம் சுவீகரித்தார்;. இந்த சமயம் தான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் அதிஉச்ச வரையறையை பலராலும் உணர்ந்தனர்.
 
‘இளவுகாத்த கிளி’ போன்று இறுக அனைத்து பற்றிப் பிடித்திருந்த நல்லாட்சியின் பிரதமரையும் தூக்கி வீசும் அளவுக்கு துணிந்த ஜனாபதி தனது தத்துனிவில் கைவந்த வித்தைகளையெல்லாம் விதைத்து வந்தார்.
இந்த சந்தரப்பத்தில் சர்வதேசமும் ஜனாதிபதிக்கு தங்களது அழுத்தங்களை அள்ளி விலாசத் தொடங்கின. அவ்வாறிருந்தும் எதனையும் பொருட்படுத்தாத ஜனாதிபதி இறுதியாக தன்வசமிருந்த இறுதித் துரும்பு என எண்ணி பாராளுமன்றத்தை இரவோடிரவாக கலைத்து வர்த்தமானியை வெளியிட்டார். அமைச்சுக்கள் அனைத்தும் பூரணப்படுத்தினர்.
 
இந்த நேரத்தில்தான்; 1978 ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். கொண்டுவந்த நிறைவேற்று முறைமையை எதிர்த்து என்.எம். பெரேரா அவர்கள் பேசிய வராலாற்றுப் பெறுமதி வாய்ந்த வாசகம் ஒன்று பலரிடமும் நினைவுகளுக்குள் ரீங்காரம் இட்டது.
இப்போது சட்டத்தை கையில் எடுத்த அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் 19 ஆவது சீர்திருத்தின் அடிப்படையில் அரசியலமைப்பினை மீறும் செயற்பாடு எனக் கூறி, வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
 
இவ் வழக்கின் பிரதிபலிப்பை இன்றைய தினம் முழு நாடுமே மடைவாய் திறந்தாற் போல் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். தீர்ப்பும் நீதியாக அமைந்த தருணம் நீதி தேவதையின் கரங்கள் இந்நாளில் மேலோங்கியது.
 
குறித்த வழக்கினை முஸ்லிம், தமிழ் கட்சிகள் உள்ளடங்கலாக சுமார் 10 இற்கும் மேற்பட்ட கட்சிகள் தாக்கல் செய்திருந்தன. இது மாத்திரமல்லாமல் சர்வதேச அழுத்தங்களும் சரமரியாக நீதித்துறைமீது உட்காவுகொண்டதுடன். தங்களின் கூர்மைப் பார்வையினையும் இந் நாள் முழுக்க சர்வதேசத்தின் ஊடக சமிக்கைஞகள் மின்னிக் கொண்டிருந்தன.
 
இந் நிலைமையில்தான் நிறைவேற்று அதிகாரமா? அல்லது ஜனநாயகமா? என்றும்;, மக்களா? மன்னரா? என்றும், உள்ளங்கை நிதி கொண்ட உள்நாடா? நிதிகளை உலங்குர்தியால் அள்ளிவீசும் வெளிநாடா? என்கின்ற பல திண்டாட்டங்களுக்கு மத்தியில் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான பிரியந்த ஜயவர்தன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றைக் கலைக்கும் முடிவுக்கு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்தனர்.
 
இது அதிர்ச்சி வைத்தியர் ஜனாதிபதிக்கே இடம்பெற்ற அதிர்ச்சி வைத்தியமாக இன்று அரங்கேறிவிட்டது. உண்மையில் குறித்த நீதியரசர் குழாமினரின் பக்கச் சார்பற்ற நீதமான தீர்ப்பை முழு இலங்கையுமே வியந்து பார்த்தது. இன்று புரிகிறது, நிறைவேற்றதிகாரமிக்க ஜனாதிபதியுள்ள இலங்கையிலும் நீதி செத்துவிடவில்லை என்பதே உறுதி!…
 
✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *