நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் வர்த்தமானி வெளிவந்தது!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான முதலாவது வர்த்தமானி அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி.பெரேரா வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவிப்பில், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தெரிவாக வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு போட்டியிடும் சுயேட்சைக் குழுக்கள் செலுத்த வேண்டிய கட்டுப்பணம் தொடர்பான விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்த வேண்டியதில்லை.

எனினும், ஒவ்வொரு சுயேச்சைக் குழுவும், தாம் போட்டியில் நிறுத்தும் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாவை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.

அத்துடன், ஒவ்வொரு மாவட்டத்தி்ல் இருந்தும் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின், எண்ணிக்கையை விட, மேலதிகமாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களை வேட்புமனுவில் உள்ளடக்க வேண்டும்.

இதற்கமைய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வருமாறு:-

கொழும்பு – 19, கம்பகா – 18, குருநாகல – 15, கண்டி – 12, இரத்தினபுரி – 11, களுத்துறை – 10, காலி – 10, அனுராதபுரம் – 09 , கேகாலை – 09, புத்தளம் – 08, பதுளை – 08, நுவரெலியா – 08, மாத்தறை – 07, அம்பாந்தோட்டை – 07, யாழ்ப்பாணம் – 07, அம்பாறை – 07, வன்னி – 06, மொனராகல – 06, மட்டக்களப்பு – 05, பொலனறுவை – 05, மாத்தளை – 05 , திருகோணமலை – 04.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *