நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிப்போம்! – ஐ.தே.கவுக்கு எஸ்.பி. பதிலடி

நாடாளுமன்றத்தில் பெரூம்பான்மையை நிரூபிப்பதற்குரிய பலம் மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கு இருப்பதாக ஆளுங்கட்சி பிரதம கொறடாவான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.


ஆளுங்கட்சி பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, நாடாளுமன்ற வளாகத்திலுள்ள அலுவலகத்தில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ 120 எம்.பிக்களின் ஆதரவு எமக்கு இருக்கின்றது. தேவையான சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்.

நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது. மாகாணசபைத் தேர்தல் முதலில் நடத்தப்படும். அதன்பின்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற அறிவிப்பை, பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிப்போம்” என்றும் எஸ்.பி. கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *