கருணா, பிள்ளையான், பியசேன வழியில் கிழக்கில் மீண்டுமொரு தமிழினத் துரோகி!
மைத்திரி – மஹிந்த பக்கம் தாவி பிரதி அமைச்சுப் பதவியைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினர் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
“வியாழேந்திரனே பல கோடிப் பணத்துக்காகவும் பாதி அமைச்சுக்காகவும் (பிரதி அமைச்சு) மைத்திரி – மஹிந்த வீசிய வலையில் சிக்கி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு நீர் செய்த துரோகத்தை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை மீறிய உமக்கு கூட்டமைப்பின் தலைமையும் தக்க பாடம் புகட்டி உம்மை மண்கவ்வச் செய்யும்!!” – என்று அந்தப் பதவிகளில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.