போலி பிரசாரங்களை நம்பவேண்டாம் – அரச தகவல் திணைக்களம் விசேட அறிக்கை!

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்று ஸ்திரத்தன்மைக்காக புதிய நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அனைத்து மக்களும் தேசிய உணர்வுடனும் உரிய புரிந்துணர்வுடன் செயற்படுவது நாட்டின் பொதுநலனுக்கு அத்தியாவசியமானதாகும் என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தேசிய ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை சீர்குலைப்பதற்கு தற்பொழுது பல்வேறு தரப்பினரைப்போன்று திட்டமிட்ட குழுக்களினால் பல்வேறு நடவடிக்கையின் ஊடாக உண்மைக்கு புறம்பான மற்றும் தவறாக வழிநடத்தக் கூடிய சிறியளவிலான பிரச்சாரத்தை நாட்டிற்குள் விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.

சமூக ஊடக வலைப்பின்னல் இணையதளங்களை போன்று சில ஊடகங்களினூடாகவும் இவ்வாறான உண்மைக்கு புறம்பான அடிப்படையற்ற செய்தி உள்ளிட்ட விடயங்கள் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு தவறாக வழிநடத்தப்படும் சிறிய கருத்துக்களின் மூலம் நாட்டின் அரசியல் ஸ்திரத் தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்துவதற்கும் பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல்களை வழங்கி வேலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைதியற்ற நிலைமையை ஏற்படுத்துவதே இவ்வாறான திட்டமிட்ட குழுவின் நோக்கமாக அமைந்துள்ளது.

இதற்கு அமைவாக எந்தவொரு தரப்பினாலும் முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற பிரச்சாரங்களில் ஏமாந்துவிடாது இந்த சந்தர்ப்பத்தில் உரிய தெளிவுடன் செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதே போன்று அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தியை பொதுமக்களுக்கு வழங்கும் பணி அரசாங்க தகவல் திணைக்களத்தின் பொறுப்பாகும் . மிகவும் விரைவாக உறுதிசெய்யப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு தகவல் திணைக்களம் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதுடன் இது தொடர்பில் தெளிவுடன் இருக்குமாறும் தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நாலக கலுவெவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *