மூன்றாண்டுகளுக்கு பிறகு தாய்வீட்டில் காலடி வைக்கிறார் மஹிந்த – விழாக்கோலத்துக்கு தயாராகிறது சு.க. தலைமையகம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சுமார் மூன்றாண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சுதந்திரக்கட்சி தலைமையகத்துக்கு செல்லவுள்ளார்.
இதற்கான நிகழ்வை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு மஹிந்தவின் சகாக்கள் தீர்மானித்துள்ளனர். அத்துடன், நாளை நடைபெறவுள்ள சு.கவின் மத்தியகுழுக் கூட்டத்திலும் மஹிந்த பங்கேற்பார் என அறியமுடிகின்றது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர், சு.கவின் தலைமைப் பொறுப்பும் மஹிந்தவிடமிருந்து பறிக்கப்பட்டது.
இதனால், கட்சிசார்ந்த எந்தவொரு நடவடிக்கையிலும் மஹிந்த பங்கேற்கவில்லை என்பதுடன், மத்தியசெயற்குழுக் கூட்டத்துக்கு விடுக்கப்படும் அழைப்புகளையும் நிராகரித்துவந்தார்.எனினும், சு.கவின் உறுப்புரிமையை அவர் துறக்கவில்லை. எம்.பி.பதவி பிறபோய்விடும் என்பதால் அவர் இதுவிடயத்தில் மதில்மேல் பூனையாகவே வலம்வந்தார்.
காலப்போக்கில் புதியகட்சிக்கு தலைமைதாங்கி அதை வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்றாலும், சு.கவிலிருந்து விலகும் அறிவிப்பை விடுக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மஹிந்தவுக்கு பிரதமர் பதவி கிடைத்துள்ளது. மைத்திரியும் அவரும் கரம்கோர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்அடிப்படையிலேயே சு.கவின் மத்தியகுழுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவுள்ளார்.