மங்களவின் பாதுகாப்பும் நீக்கம் – ‘ஐயோ சிறிசேன’ என்று டுவிட்டரில் பதிலடி!

ஜனாதிபதி மைத்திரிபாலவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் கடுமையாக விமர்சித்துவரும் நிதியமைச்சராக இருந்த மங்கள சமரவீரவின் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் மங்கள சமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
“ மைத்திரிபால மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளார். எனது பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது. ஐயோ…. சிறிசேன..” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தான் தான் சட்டரீதியான பிரதமர் என அறிவித்துவரும் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *