அரச ஊடகங்களின் தலைவர்கள் அதிரடி மாற்றம்!

பிரதான அரச ஊடக நிறுவனங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மூன்று பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமங்களை வழங்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சட்டத்தரணி சரத் கொன்கஹகே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆகியவற்றின் தலைவராக பேராசிரியர் சோமரத்ன திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராக வசந்த பிரிய ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *