மருமகள்களிடம் சில்மிசம் காட்டிய காமுகன் மாமாவுக்கு பதுளையில் வலைவீச்சு!

அனாதரவற்ற நிலையில் இருந்த 14 மற்றும் 11 ஆகிய வயதுகளையுடைய இரு சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த தாயின் சகோதரனைத் தேடி, பதுளைப் பொலிசார் வலைவிரித்துள்ளனர்.


குறிப்பிட்ட சிறுமிகளின் தகப்பன் இறந்த நிலையில், பிள்ளைகளைக் காப்பாற்றுவதற்கென்று தாய், மத்திய கிழக்கு நாடொன்றிற்கு சென்றிருந்தார்.

தாயின் சகோதரியின் வீட்டில், குறிப்பிட்ட இரு சிறுமிகளும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், அச் சிறுமிகள் தமது சிறிய தாயார் வீட்டில் அனாதரவான நிலையிலேயே, இருந்ததாக, அச்சிறுமிகள் பொலிசாரிடம் தெரிவிந்துள்ளனர்.

இச் சிறுமிகளின் மாமனாரான நபர், இச்சிறுமிகளைப் பயமுறுத்தி, அச்சிறுமிகள் மீது அடிக்கடி துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சிறுமிகள் தனது மாமனாரின் ஊடாக துஸ்பிரயோகம் செய்யப்படுவதை, பதுளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, பொலிசார் சிறுமிகளின் மாமனாரைக் கைது செய்ய முற்பட்ட போதிலும், அந்நபர் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியிருப்பதால், அவரைக் கைது செய்ய முடியவில்லையென்றும், ஆனாலும், அந் நபரை விரைவில் கைது செய்ய முடியுமென்றும் பொலிசார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைக்கென்று, பதுளை அரசினர் மருத்துவ மனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *