கொடும்பாவி எரித்து தொழிலாளர்கள் போராட்டம் – மலையகமெங்கும் ஓங்கி ஒலிக்கிறது புரட்சிக் குரல்

மலையக அரசியல் தலைவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி போகாவத்தை கெலிவத்தை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியின் கெலிவத்தை சந்தியில் 20.10.2018 அன்று காலை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

200 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் கொடும்பாவியும் எரியூட்டப்பட்டதோடு, பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, தொழிலாளர்களின் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் தோட்ட அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கு வாழ்க்கை செலவிற்கேற்ப சம்பள உயர்வு கிடைக்கின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வுக்கு போராட வேண்டியுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கவாதிகள் தமக்கான ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுத்தர வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

க.கிஷாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *