தமிழ் நாட்டுப் பாணியில் வட்டகொடையில் ஆர்ப்பாட்டம்! – வீதியில் இறங்கித் தொழிலாளர்கள் ஒப்பாரி

தலவாக்கலை, வட்டகொடை மேற்பிரிவு, கீழ்பிரிவு, ஒக்ஸ்போட், மடக்கும்புர, மேற்பிரிவு, கீழ்பிரிவு, புதுகாடு, நடுபிரிவு, வடக்கிமலை,சின்ன கணக்கு, சவூத் மடக்கும்புர ஆகிய தோட்ட தொழிலாளர்கள் 18.10.2018 அன்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.

1000 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்குவட்டகொடை நகர வர்த்தகர்கள் அனைத்து கடைகளையும் அடைத்து ஆதரவு தெரிவித்ததோடு, சாரதி சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில்கலந்து கொண்டு எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

காலை 10.00 மணியளவில் குறித்த தோட்டப்பகுதிகளிலிருந்து கருப்பு கொடிகளை ஏந்தியும், சுலோகங்களை ஏந்தியும், கொடும்பாவியைதூக்கிக்கொண்டும், கொடும்பாவியை செருப்பால் அடித்தும் ஊர்வலமாக சென்றனர்.

ஊர்வலமாகச் சென்றவர்கள்  தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியின் வட்டகொடை நகரத்தில் வைத்து கோஷங்களை எழுப்பியவாறு கொடும்பாவியை அடித்து உதைத்து ஒப்பாரி வைத்து தீ வைத்து எறித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து  கொண்டமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *