ஊவா மண்ணிலும் வெடித்தது போராட்டம்! – ரூ.1000 கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என தொழிலாளர்கள் முழக்கம்

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுகோரியும், கம்பனிகளின் அடக்குமுறைக்கு எதிராகவும் ஊவா மண்ணிலும் போராட்டம் வெடித்துள்ளது.


இதன்படி அப்புத்தளைப் அப்புத்தளைப் பகுதியின் தொட்டலாகலை, பிட்டரத்மலை, பசறை ஆகிய பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இன்று (18) இரண்டாவது தினமாகவும் தோட்ட நிருவாகத்திற்கு ஒத்துழையாமல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


இப்போராட்டத்தின் போது, தோட்டத்தொழிலாளர்கள் ஆயிரம் ரூபா தினச் சம்பளத்தைக் கோரியும், தோட்ட பெருந்தோட்ட கம்பனிகளை எதிர்த்தும், தீபாவளிப் பண்டிகை முற்பணத்தை உடனடியாக வழங்குமாறு கோரியுமே கோஷங்களை எழுப்பிய வண்ணமிருந்தனர்.

இவர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி, தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.


பதுளை – செல்வராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *