ஐ.தே.கவுடன் உறவை தொடர்வதா? முறிப்பதா? – அவசரமாகக் கூடுகின்றது சு.கவின் மத்திய குழு

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது.


கட்சித் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முழுமையாக வெளியேறவேண்டும் என கூட்டுஎதிரணியுடன் சங்கமித்துள்ள சு.கவின் 15 பேர்கொண்ட அணி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அத்துடன், இடைக்கால அரசமைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

எனினும், 2020 வரை தேசிய அரசு தொடரவேண்டும் என மைத்திரி பக்கமுள்ள சு.கவின் 23 உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

எனவே, இவ்விடயம் சம்பந்தமாக இன்றையக் கூட்டத்தில் ஆராயப்பட்டு – முடிவொன்று எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, கடசியின் மாநாடு, கட்சி மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *