தொற்றா நோய்களைத் தடுக்க AIA இன்ஷூரன்ஸால் விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுப்பு

AIA இன்ஷூரன்ஸ், நீரிழிவு, புற்றுநோய், மற்றும் இதய நோய்கள் போன்ற தொற்றா நோய்களைக் (NCD) கட்டுப்படுத்துவதற்கும், நிர்வகிப்பதற்கும் நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வுச் செயற்பாட்டைத் தற்போது முன்னெடுத்து வருகின்றது.

இலங்கையில் நிகழும் 75% மரணங்களுக்கான காரணமாக இருப்பது தொற்றா நோய்களாகும் என்பது நன்கு அறியப்பட்டதொரு உண்மையாகும்.அதாவது இது உலகலாவிய 63% இனை விட மிகவும் வெளிப்படையானதும், தெளிவானதுமானதொரு அதிகரிப்பாகும்.

குறிப்பாகப் பெரும்பாலான தொற்றா நோய்களானது, ஆரோக்கியமற்ற உணவுமுறை, புகைத்தல், மிதமிஞ்சிய மதுபாவனை, குறைவான உடற்பயிற்சி மற்றும் போதுமற்ற நித்திரை போன்ற மிகவும் மோசமான வாழ்க்கை முறைத் தெரிவுகளின் விளைவுகளினாலேயே ஏற்படுகின்றன.

மக்கள் இதற்கான காரணம், தடுப்பு முறை போன்றவை பற்றி சிறந்த கல்வி அறிவையும், மற்றும் இதைக் கண்டறிவதற்கான சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமிடத்து, இவ்வாறான வாழ்க்கை முறை சார்ந்த தொற்றா நோய்களைத் தடுப்பது மட்டுமின்றி, இவற்றை முறையாக நிர்வகித்து பூரணமாகக் குணப்படுத்தவும் முடியும் என்பதை நினைவில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இதற்காக AIA விசேட வைத்திய நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், மற்றும் வைத்திய ஆலோசகர்கள் ஆகியோரின் உதவியுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு எழுச்சிக் கருத்தரங்குகளின் தொடர் ஒன்றை ஆரம்பித்திருந்தது.

இக்கருத்தரங்குகள், ஆரோக்கியமான மற்றும் நன்கு தகவலறிந்த சமூகத்தை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டமைவதோடு, ஒருவருடைய நிதியியல் ஆரோக்கியப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது. மருத்துவப் பராமரிப்புச் சேவையின் செலவுகளின் அதிகரிப்பைக் கருத்திற் கொண்டு, மருத்துவ அவசரத் தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கான நிதியியல் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களுக்கு ஆலோசனை வழங்குவதிலேயே AIA கவனம் செலுத்துகின்றது.

இந்த ஆண்டில் மேலும் பல திட்டங்களுடன் நாடு முழுவதும் 18 கருத்தரங்குகளை AIA முன்னெடுத்துள்ளது. இந்த நாடளாவிய ரீதியிலான விழிப்புணர்வு உருவாக்கச் செயற்பாட்டின் ஒட்டுமொத்தக் குறிக்கோளானது, இலங்கையர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவுவதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *