‘செலான் கொழும்பு மோட்டார் கண்காட்சி 2018’

‘செலான் கொழும்பு மோட்டார் கண்காட்சி 2018’, ஒக்டோபர் 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த கண்காட்சியின் பிரதான அனுசரணை மற்றும் உத்தியோகபூர்வ வங்கி பங்காளராக செலான் வங்கி தொடர்ச்சியாக 5ஆவது வருடமாகவும் கைகோர்த்துள்ளது.

இதனூடாக, வாகன ஆர்வலர்களின் வாகன கனவை நிவர்த்தி செய்வதற்காகவும், சௌகரியமான மற்றும் சிக்கலற்ற லீசிங் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கவும் செலான் வங்கி முன்வந்துள்ளது. மேலும், உடனடி கடன் மதிப்பீடு மற்றும் லீசிங் அனுமதிகளையும் செலான் வங்கி வழங்கும்.

சொகுசு கார்கள், SUVகள் போன்ற பல்வேறு வாகனத் தெரிவுகளை இந்த கண்காட்சி கொண்டிருக்கும். மேலும், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்வுகளும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் இடம்பெறும்.

படம் –
செலான் வங்கியின் நுகர்வோர் நிதியியல் பிரிவின் பதில் பொது முகாமையாளர் டெல்வின் பெரேரா, அனுசரணைக்கான உடன்படிக்கையை ஏசியா எக்ஸிபிஷன் அன்ட் கொன்வென்ஷன்ஸ் பிரைவட் லிமிட்டெட் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான டிரோன் சந்திரசேகரவுடன் பரிமாறிக் கொள்வதுடன், அருகில் செலான் வங்கி மற்றும் ஏசியா எக்ஸிபிஷன் அன்ட் கொன்வென்ஷன்ஸ் பிரைவட் லிமிட்டெட் ஆகியவற்றின் அதிகாரிகள் காணப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *