யாழில் குடும்பப் பெண் கொலை: மூவர் பொலிஸாரிடம் சிக்கினர்; மேலும் மூவருக்கு வலைவீச்சு

யாழ். ஊரெழு பகுதியில் குடும்பப் பெண்ணை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பப் பெண்ணின் மகன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலும் மூவர் விரைவில் கைதுசெய்யப்படுவர் என்றும் பொலிஸார் கூறினர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் குடும்பப்பெண் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

மகனைத் தாக்க வந்தவர்களைக் குறித்த பெண் தடுக்க முற்பட்டபோது பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்கக் கொலைசெய்யப்பட்டார்.

வீட்டுக்குள் புகுந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இந்தக் கொலையைச் செய்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது – 57) என்ற குடும்பப் பெண்ணே கொலைசெய்யப்பட்டார். அவரது மகன் காயமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *