ரூ. 1000 சம்பளம்கோரி மலையகமெங்கும் வெடிக்கிறது போராட்டம்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம உயர்வு கோரி, கொட்டகலை டிரேட்டன் தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கம்பனிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவண்ணமும் சுமார் ஒரு மணிநேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றது.
“உரிய முறையில் முதலாளிமார் சம்மேளனத்துடன், தொழிற்சங்கங்கள் பேச்சு நடத்தி பண்டிகை காலத்திற்கு முன்பதாக தோட்ட தொழிலாளர்களுக்கு இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டும். எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டுவேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தின் போது சுமார் 350ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
க.கிஷாந்தன்