போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு – வீதி வெடித்ததால் அச்சத்தில் மக்கள்!

அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக அவ்வீதியினூடாக போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மலையகத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 06 குடும்பங்களை சேர்ந்த 23பேர் வெளியேற்றபட்டதோடு, அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதியில் வீதி தாழ் இறங்கியும் காணப்பட்டது.

குறித்த வீதி பாரியளவில் தாழ் இறங்கியுள்ளதோடு, நிவ்வெளிகம பகுதியில் பாரிய மண்சரிவு அபாயம் காணபடுகின்றமையால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதோடு, அட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா சாமிமலை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்தில் மாற்றம் செய்யபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள பாரிய மண்மேடு ஒன்று எந்நேரத்திலும் சரிந்து வர கூடுமென தேசிய கட்டிட ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

குறித்து வீதி திறக்கபடும் வரை மாற்று வழியினை பயன் படுத்துமாறு வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரியுள்ளதோடு, அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியிலும் பாரிய வெடிப்புகள் காணப்பட்டுள்ளதோடு, குறித்த பகுதிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

 

க.கிஷாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *